ஆகாசம் ஏனாதிதோ...கேளதே நிம கீகா...ஜொதயலி...

இங்கே தமிழைத் தவிர சில பாடல்களைப் பதிவு செய்ய விரும்பினேன். இளையராஜா அவர்களுடைய இந்தப் பாடல்கள் தமிழில் பிறகு வந்திருந்தாலும், முதன் முதலாக வேறு மொழிகளில் பதிவு செய்யப்பட்டவை. அது ஏனோ தெரியவில்லை, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பாடல்களை மாற்றும் போது அதன் ரஸம் குறைவதாகவே தோன்றுகிறது. என் பிரம்மையாகக் கூட இருக்கலாம். ஒரு சில பாடல்களே மொழி மாற்றம் செய்யும் போது கச்சிதமாகத் தோன்றியிருக்கின்றன.

எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கண் மூடி நினைத்ததும் தோன்றிய பாடல்கள் இங்கே...


1. ஆகாசம் ஏனாதிதோ...

பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'நிரீக்ஷனா' (தெலுங்கு). பாலு மகேந்திராவின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் இந்தப் பாடலில் இளையராஜாவின் இசை உச்சங்களைத் தொடும். இசை மனதை வருடும் போதே, அதில் தெரியும் காட்சியும் சேர்த்து நம்மை மெய் மறக்கச் செய்யும். இதில் நடித்திருக்கும் கதாநாயகி தேசிய விருது வாங்கியது ஏன் என்பது இந்தப் பாடலைப் பார்த்தாலே தெரியும். அவ்வளவு முகஜாடைகள் காட்டியிருப்பார். ஆணாக இருந்தும் அவளை, அவளின் செய்கைகளைக் கற்பனை செய்த பாலு மகேந்திரா சிறந்த படைப்பாளி.
2. கேளதே நிம கீகா...தூரதல்லி யாரோ

இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'கீதா' (கன்னடம்). இந்தப் படத்தில் நடித்திருக்கும் 'சங்கர் நாக்' கன்னடத் திரையுலகின் முக்கிய படைப்பாளி. இந்தப் பாடலின் சிறப்பம்சம், பாடலுக்குள் ஒரு கதை சொல்லப்படுகிறது. நம்முடைய பழங்கால இசை வடிவங்களில் ஒன்று அது. பாடலினாலேயே கதை சொல்வது. இதைப் பாடியிருக்கும் 'பாடும் நிலா' பாலு இசையை சிம்மாசனமிட்டு அமர்த்தியிருப்பார். பின்னாளில், இந்தப் பாடலை அடிப்படையாக வைத்து ஒரு படமே தயாரிக்கப்பட்டதாக செய்தி.3. ஜொதயலி...ஜொத..ஜொதயலி..

இந்தப் பாடலும் 'கீதா' (கன்னடம்) படத்தில் இடம் பெற்றது தான். அருமையான பாடல். 'ஜானகி'யும், பாலுவும் அசத்தியிருப்பார்கள்.
இவை மனதைத் தொட்டு வருடும் பாடல்கள். தமிழில் இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல்களை அந்தந்த மொழியிலேயே கேட்க விரும்புகிறேன்.


4 comments:

Matangi Mawley said...

nice songs these are! bt could u let know wht r the tamil sngs for these songs? i ve nt heard them in tamil..

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

ஆகாசம் ஏனாதிதோ - 'நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே...' கண்ணே கலைமானே படத்தில்;

ஜொதயலி.. ஜொத ஜொதயலி.. - 'விழியிலே மணி விழியிலே...' நூறாவது நாள் படத்தில்

கேளதே நிமகீகா - 'தேவதை இளம் தேவி...' ஆயிரம் நிலவே வா திரைப்படத்தில்

இதில் 'ஆகாசம் ஏனாதிதோ...' முதலில் மலையாளத்தில் வந்தது. பிறகு தெலுங்கு, பிறகு தமிழ். மற்ற இரண்டும், கன்னடத்தில் முதலில் வந்தது; பிறகு தமிழில்.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

தமிழ்ப் பாடல்கள் வேண்டுமென்றால் mp3 என்னிடம் இருக்கிறது. இணையத்தில் கிடைக்கலாம்.

Matangi Mawley said...

@ ramakrishnan..

thanks a ton! :)