சட்டென நனைந்தது நெஞ்சம்...

First thing came to my mind after I saw Manasa's post 'Water on a lotus leaf', is the song 'Sattena Nanaindhadhu Nenjam' from movie 'Kannathil Muthamittal'.

இன்னும் ஒரு மணிரத்னம், ஏ. ஆர். ரஹ்மான், வைரமுத்து அற்புதம்.



சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

(சட்டென நனைந்தது நெஞ்சம்...)

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்....
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்

தாவி வந்து எனை அணைத்த போது எந்தன்
சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று
ரெண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு
வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று
அச்சத்தை

(துடிக்கும் உதடு கொண்டு...)

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!


இந்த உணர்வை இதைவிட அழகாக யாராலும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்.


1 comments:

Sreekrishnan said...

Very interesting that you wrote one on this ... i wrote one a couple of days back. And thanks i noticed i had some lyrics wrong. ...

http://sreekrishnan.wordpress.com/2010/06/08/sattena/